கொழும்பில் ராஜபக்சே ஆதரவு கும்பல் வெறியாட்டம்-போராட்டகாரர்கள் மீது தாக்குதல்- நாடு முழுவதும் ஊரடங்கு
இலங்கை: பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத அரசு பதவி விலக கோரி ஒரு மாத காலமாக முகாமிட்டு போராட்டம் நடத்துவோர் மீது இன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் திடீரென தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டகாரர்கள் அமைத்திருந்த கூடாரங்களையும் ராஜபக்சே ஆதரவாளர்கள் தீ வைத்து எரித்தனர். இதனைத் தொடர்ந்து இலங்கையில் நாடு தழுவிய போலீஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ராஜபக்சேக்கள் அரசு பதவி விலக வலியுறுத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்பு காலிமுகத்திடலில் பொதுமக்கள் கூடாரங்கள் அமைத்து முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சிங்களர், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் என மூவின மக்களும் இணைந்து பங்கேற்றுள்ளனர்.

இரட்டைவேட ராஜபக்சே
இப்போராட்டம் இடைவிடாமல் நடைபெறுவதால் ராஜபக்சேக்கள் பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே இன்று பதவி விலகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலையில் மகிந்த ராஜபக்சேவும் இதனை சூசகமாக தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் ராஜபக்சே ஆதரவாளர்கள் அவர் பதவி விலக கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

ராஜபக்சே கும்பல் வெறியாட்டம்
இதனையடுத்து ஆத்திரமடைந்த ராஜபக்சேக்களின் ஆதரவாளர்கள் முதலில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் கொழும்பு காலிமுகத்திடல் நோக்கி சென்றனர். அங்கு போராட்டகாரர்களின் கூடாரங்களுக்கு தீ வைத்து தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ராஜபக்சேக்களின் ஆதரவாளர்கள் மீது நீர் பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடிக்க முயற்சித்தனர். ஆனாலும் ராஜபக்சே ஆதரவு குண்டர்கள் வெறியாட்டம் தொடருகிறது. இதனால் கொழும்பில் பதற்றம் நீடிக்கிறது. இது வரை இந்த மோதல்களில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலைவர்கள் மீது தாக்குதல்
இதனிடையே ராஜபக்சே ஆதரவு கும்பலின் வெறியாட்டம் தொடர்பான தகவல் கிடைத்த உடன் அரசியல் கட்சித் தலைவர்கள் காலிமுகத் திடலுக்கு விரைந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸநாயக்க உள்ளிட்டோர் காலிமுகத் திடலுக்கு சென்றனர். ஆனால் அரசியல் கட்சித் தலைவர்களை காலிமுகத் திடலுக்குள் அனுமதிக்காமல் ராஜபக்சே ஆதரவு கும்பல் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் கொழும்பு தெற்கு, வடக்கு, மத்திய போலீஸ் பிரிவுகளில் முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் நாடு தழுவிய போலீஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
|
தாக்குதலுக்கு கண்டனம்
இச்சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்த மூத்த அரசியல் தலைவர் கருஜயசூரிய, அமைதியாகப் போராடியவர்களைத் தாக்கிய இந்த ஆட்சியின் குண்டர்கள், பிரதமரின் அழைப்பின் பேரில் அவரது அலுவலகத்துக்கு வந்து, நிராயுதபாணியான பொதுமக்களை தாக்கியுள்ளனர். இதன் போது பொலிஸ் என்ன செய்து கொண்டிருந்தது ? இதற்காகவா ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை பிரகடனம் செய்தார் ? என கேள்வி எழுப்பினார்.

ராஜபக்சேக்கள் வேண்டுகோள்
இதனிடையே ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்த ராஜபக்சே தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் கொழும்பு வன்முறை சம்பவங்களுக்கு கண்டனமும் வருத்தமும் தெரிவித்துள்ளனர். மேலும் ஆதரவாளர்கள் வன்முறைகளை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். வன்முறைகளால் வன்முறைகளே உருவாகும் எனவும் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.

வன்முறைக்கு மனோ கணேசன் கண்டனம்
இந்த வன்முறைகள் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: உலகின் மிக அமைதியான 31-நாள் கொழும்பு காலிமுக திடல் போராட்டம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்து கிளம்பி வந்த அரச பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இலங்கையர்களின் #GoHomeGota & #GoHomeRajapaksas என்ற கோஷங்கள் இனி சர்வதேச சமூகத்தின் கோஷமாகவும் மாற வேண்டும்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications