இலங்கை குண்டுவெடிப்பை உன்னிப்பாக கவனிக்கிறோம்.. சுஷ்மா டிவிட்.. உதவி எண்கள் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

    கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட் செய்துள்ளார். மேலும் அங்கிருக்கும் இந்தியர்களுக்காக தற்போது உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 3 ஹோட்டல்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 100க்கும் அதிகமானோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வருகிறது.

    Sri Lanka Bomb Blast: We are keeping a close watch on the situation says Sushma Swaraj

    மொத்தம் ஆறு இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது.

    மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இதில் 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தூதரக அதிகாரிகளுடன் இதுகுறித்து பேசி வருகிறேன் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட் செய்துள்ளார்.

    அதேபோல் அங்கு இருக்கும் இந்தியர்கள் உதவிகளை பெறுவதற்காக தற்போது இந்திய வெளியுறவுத்துறை சார்பாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இலங்கையில் தூதரக உதவிகள் தேவைப்படும் இந்தியர்கள் தொடர்பு கொள்ள வசதியாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் உள்ள இந்தியர்கள் +94777903082, +94112422788, +94112422789, +94777902082, +94772234176 ஆகிய அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+