For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் குடும்ப உறுப்பினர்களை கணக்கெடுக்க முடியாது! - இலங்கை அரசு

By Shankar
Google Oneindia Tamil News

Sri Lanka refused to include Prabhakaran family members
கொழும்பு: போர்க்கால இழப்புக்கள் தொடர்பான மதிப்பீட்டின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குடும்பத்தைக் கணக்கெடுக்க முடியாது. அவரது குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை என புள்ளி விபரவியல் மற்றும் தொகை மதிப்பீட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் நடந்த இனப் போரில் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புகள் குறித்த மதிப்பீடு இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை புள்ளி விபரவியல் மற்றும் தொகை மதிப்பீட்டு அலுவலகத்தின் ஆணையர் டி.டபிள்யு.டி.குணவர்த்தன இதுகுறித்து கூறுகையில், "போரில் ஏற்பட்ட இழப்புக்களை கணக்கெடுக்கும் நடவடிக்கை நேற்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக 1983 ஆம் ஆண்டு முதல் 2009 மே வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற சொத்தழிவு, உயிரிழப்பு, காணாமற் போனவர்கள் தொடர்பில் கணக்கெடுக்கும் பணிகளை புள்ளி விவரவியல் மற்றும் தொகை மதிப்பீட்டுத் துறை நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது.

ஆனால் இதில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களை கணக்கில் சேர்க்க முடியாது. அவர்களின் குடும்பத்தில் யாருமே உயிருடன் இல்லை," என்றார்.

English summary
The government of Sri Lanka announced plans this week to conduct a nationwide census to tally “human and property damages” inflicted during the nation’s three decades of civil war, but refused to include Prabhakaran family members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X