இஸ்லாமியருக்கு எதிராக இலங்கையில் சிங்களருடன் கை கோர்த்த இந்துத்துவா 'முகமூடிகள்'
இலங்கையில் சிங்களர்களுடன் கை கோர்த்துள்ளனர் இந்துத்துவா அமைப்புகள்.
Recommended Video

யாழ்ப்பாணம்; இலங்கையானது இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் சொந்தமான பூமி; இந்த மதங்களின் மரபுகளை ஏற்க முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என இஸ்லாமியர்களுக்கு இந்துத்துவா அமைப்பான சிவசேனை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் யுத்தத்துக்குப் பின்னர் தமிழர்களை இந்துக்களாக ஒருங்கிணைக்கலாம் என்கிற முயற்சியில் இந்தியாவில் உள்ள இந்துத்துவா அமைப்புகள் முனைப்பு காட்டின. இதற்காக கல்வியாளர், ஆய்வாளர் என்கிற அடைமொழியுடன் தமிழகத்தில் வலம் வந்த மறவன்புலவு சச்சினாந்தன் களமிறக்கப்பட்டார்.

மும்பையில் சிவசேனை தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை நீண்டகாலமாக சந்தித்து வந்தார். தற்போது இலங்கையில் சிவசேனை என்ற பெயரில் இந்து சாமியார் சீருடையில் உருத்திராட்ச உடையில் வலம் வருகிறார் சச்சிதானந்தம். தமிழகத்தில் இருந்தபோது முழு வெள்ளை உடையில்தான் வலம் வருவார்.
தமிழர் வாழும் பகுதிகளில் இந்துக்கள் என்ற முழக்கத்துடன் சமய நிகழ்ச்சிகள், வகுப்புகளை எடுத்தல் என நீண்டகாலமாக ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை சிவசேனை நடத்தி வந்தது. இப்போது பகிரங்கமாக தமிழர் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுக்கு மிரட்ட விடுத்து சச்சிதானந்தன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சி கொள்முதல் கடை இருக்கக் கூடாது; இது இந்துக்களின் பூமி. இங்கே 5,000 ஆண்டுகால மரபு கடைபிடிக்கப்படுகிறது. மாட்டிறைச்சி உண்போரின் நாடுகளில் நாங்கள் பன்றி இறைச்சி சாப்பிட முடியுமா? இந்த பூமி இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்குமானது.. மரபுகளை பின்பற்றாமல் போனால் நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார் சச்சிதானந்தன்.
இஸ்லாமியர்கள் என குறிப்பிடாமல் அப்பட்டமாக மிரட்டல் விடுத்து பேசியிருக்கிறார் சச்சிதானந்தன். ஈழத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே யுத்த காலத்தில் மனக்கசப்பு இருந்தது. பின்னர் பிரபாகரன் சமாதானப் பேச்சுகளை முன்னெடுத்த போது இதற்கு தீர்வு காணப்பட்டது. யுத்தத்துக்கு பின்னர் இஸ்லாமியர்கள் யாழ்ப்பாணத்தில் சொந்த வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் தமிழ் பேசும் இந்து-இஸ்லாமியர் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவா அமைப்பினர் சிங்கள சக்திகளுடன் கை கோர்த்திருப்பது பேரபாயம் என்கின்றனர் யாழ். தமிழர்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications