For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனநாயகத்திற்காக இலங்கை மக்கள் தொடர்ந்து போராட வேண்டும்.. ரணில் அழைப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பது யார் தெரியுமா?- வீடியோ

    கொழும்பு: ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாட்டு மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்று இலங்கை மக்களுக்கு ரணில் விக்ரமசிங்கே அறைகூவல் விடுத்துள்ளார்.

    இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அப்பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அக்டோபர் 26ம் தேதி இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்தார். பின்னர் முன்னாள் பிரதமர் மகிந்தர ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டார்.

    Srilanka people should not leave their protest: Ranil Wickremesinghe

    ஆனால் உலக நாடுகள் கண்டனத்தால், நவம்பர் 16ம் வரை இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அதிபர் அறிவித்தார். இதற்கும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததால், நவம்பர் 14ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்ட உள்ளதாக சிறிசேனா அறிவித்தார்.

    [இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னணி என்ன? கண்ணில் விரல் விட்டு ஆட்டிய தமிழர் தேசிய கூட்டமைப்பு]

    ஆனால், நாடாளுமன்றத்தையே கலைத்து அதிபர் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.

    இலங்கை பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரணில் கூறுகையில், அதிகார மாற்றம் செய்யும் அதிபர் சிறிசேனாவின் திடீர் முடிவை எதிர்த்து போராடி வருவதற்கு மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையின் ஜனநாயகம் சிறைவைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் கருப்பு காலகட்டம். மக்கள் தங்கள் போராட்டங்களை கைவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    English summary
    Ranil Wickremesinghe request people of Srilanka that, they should not leave their protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X