Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையின் நிலம், வான், கடல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது-அனுர குமார திசநாயக்க

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையின் நிலம், வான், கடல் ஆகியவை இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது என இந்தியாவுக்கு ஏற்கனவே தாம் வாக்குறுதி கொடுத்துள்ளதாக புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தம்மை சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் தாம் இதனை தெரிவித்திருக்கிறேன் என்கிறார் அனுர குமார திசநாயக்க.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகிறார் இடதுசாரி, சிங்கள பேரினவாதி அனுர குமார திசநாயக்க. இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தினக்குரல் நாளிதழுக்கு அனுர குமார திசநாயக்க அளித்த பேட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

sri lanka presidential election 2024 sri lanka election anura kumara dissanayake 2024

தினக்குரல் நாளிதழுக்கு அனுர குமார திசநாயக்க அளித்த பேட்டியில் இந்தியா தொடர்பாக தெரிவித்திருப்பதாவது: எந்த நாடும் எந்த அரசியல் தேவையுடன் காய்களை நகர்த்தினாலும் எமது நாட்டு மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அதனால் மக்களின் மனங்களிலுள்ள அவர்களின் தேவைகளை எவராலும் மாற்றியமைக்க முடியும் என நாங்கள் நம்பமாட்டோம். இந்த புதிய நிலை மாற்றம் மக்களுக்கே தேவைப்பட்டிருக்கிறது. சில நேரங்களில் அரசியல் கட்சிகளின், கட்சித் தலைவர்களின் கடமைகள் என்ற எல்லாவற்றையும் விஞ்சி சென்று பொதுத்தேவையாக மாறியிருக்கிறது.

இலங்கைக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்நாட்டின் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். எங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு முன்னரும் நான் அவரை இந்தியாவிலேயே சந்தித்து கலந்துரையாடியிருக்கிறேன். நாங்கள் அவருக்கு மிகவும் முக்கியமான உத்தரவாதத்தைக் கொடுத்திருக்கிறோம்.

இலங்கையின் நிலம், வான் மற்றும் கடல் என்பவற்றை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வகையில் நாங்கள் பாவிக்க மாட்டோம் என்கின்ற உத்தரவாதத்தை அளித்திருக்கிறோம். அதனைத் தவிர்த்ததாக நாட்டில் தோன்றியுள்ள நிலைமை பற்றியும் இலங்கையின் எதிர்காலம் பற்றியுமே நாங்கள் உரையாடினோம். இவ்வாறு அனுர குமார திசநாயக்க அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+