தமிழ்நாட்டில் கூட ராஜபக்ஷேவை எதிர்க்கிறோம்.. இலங்கையில் தமிழ் கட்சிகள் சில முடிவை பாருங்கள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை அதிபராக மஹிந்த ராஜபக்ஷ தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை வைத்துள்ள தமிழ் கட்சிகள் எந்த மாதிரி நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்று கேள்வி எழுந்துள்ளது.

இலங்கை, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை திடீரென பதவி நீக்கம் செய்துவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அந்த பதவிக்கு கொண்டு வந்துள்ளார் அதிபர் மைத்திரிபால சிறிசேனா.

இந்த திடீர் அரசியல் மாற்றம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[சு.சாமி இலங்கை பயணம், ராஜபக்சே இந்திய பயணத்திற்கிடையே நடந்தது என்ன... கேள்வி எழுப்பும் தலைவர்கள்]

இனப்படுகொலை

இனப்படுகொலை

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது தமிழர்களுக்கு எதிராக பெரும் இனப்படுகொலையை நடத்தியவர் அப்போது அதிபராக இருந்த ராஜபக்சே. இன்னும் கூட பல ஆயிரம் பேர் என்ன ஆனார்கள் என்ற தகவல் கூட தெரியாமல் தமிழர்கள் கதறிக் கொண்டு உள்ளனர்.

இறுதிப்போர்

இறுதிப்போர்

இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தமிழக அரசியலிலும் எதிரொலித்தது. தமிழகத்தில் சில கட்சிகள் இந்த இன அழிப்பில் மறைமுகமாக பங்கு பெற்றதாக பரப்புரை மேற்கொள்ளப்பட்டு, அவற்றிற்கான மக்கள் ஆதரவு பெருமளவில் சரிவதற்கு இந்த இறுதிப்போர் ஒரு காரணமாக அமைந்தது.

பெரும்பான்மை

பெரும்பான்மை

இந்த நிலையில்தான் மஹிந்தா ராஜபக்சே தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகப்படியான உறுப்பினர் பலமுள்ளதால், இப்போது சிறுபான்மையினரின் தயவு மஹிந்த ராஜபக்ஷ தேவைப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் ஏழு எம்பிகளை வைத்துள்ளது. அந்த கட்சி தங்கள் ஆதரவு ரணில் விக்ரமசிங்கேவிற்கு என்று தெரிவித்துள்ளது. ராஜபக்ச ஆட்சியில் இன மோதல் காரணமாக முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த கட்சி ராஜபக்சேவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து அதை அறிவித்துள்ளது.

டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ் தேவானந்தா

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை ராஜபக்சேவுக்கு அளித்துள்ளது. இந்த கட்சிக்கு 2 எம்பிக்கள் உள்ளனர். மற்றொரு முக்கிய விஷயமாக ஈழ மக்களின் குடியரசு கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வரும் முன்னாள் அமைச்சர், டக்ளஸ் தேவானந்தா தனது ஆதரவை மஹிந்த ராஜபக்ஷவுக்கு அளித்துள்ளார். இந்தக் கட்சியின் உறுப்பினர் பலம் ஒன்று.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+