தமிழக மீனவர் பிரச்சனை: இலங்கை வெளியுறவு அமைச்சருடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணாநாயகேவை சந்தித்தார். அப்போது தமிழக மீனவர்களை மரியாதையாக நடத்துவோம் என இலங்கை அமைச்சர் உறுதியளித்ததாக அவர் கூறினார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இலங்கை சென்றுள்ளனர். நேற்று வடக்கு மாகாண முதல் விக்னேஷ்வரனை சந்தித்த அவர் மோடி எழுதி புத்தகம் ஒன்றை அவருக்கு வழங்கினார்.

 Tamilnadu BJP leader Tamilisai meets Srilankan external affairs minister

இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயகேவை சந்தித்தேன். தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரினேன்.

தமிழக மீனவர்களை மரியாதையாக நடத்த கேட்டுக் கொண்டேன். இலங்கை அமைச்சரும் தமிழக மீனவர்களை மரியாதையாக நடத்துவதாகவும் உறுதி அளித்தார்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu BJP leader Tamilisai meets Srilankan external affairs minister. She urged Srilankan minister to release Tamil fishermens.
Please Wait while comments are loading...