For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தலைவர் திடீர் கைது

Google Oneindia Tamil News

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படையில் பெண் போராளிகள் குழுவின் தலைவியாக பொறுப்பு வகித்தவரான முருகேசு பாஹிரதிதி என்பவரை இலங்கைப் போலீஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு கட்டுநாயகே விமான நிலையத்தில் வைத்து பாஹிரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடல் புலிகள் படையின் பெண் போராளிகள் குழுவின் தலைவியாக இருந்தவர் பாஹிரதி. இவரது கணவர் சுப்பிரமணியம் ஜெயகணேசன். இவரும் புலிகள் அமைப்பில் சர்வதேச நிதி தொடர்புகளைக் கவனித்து வந்தவர்தான்.

Top woman leader of LTTE arrested at Colombo airport

1997 ஆம் ஆண்டில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை கடல் புலிகள் படையின் பெண் போராளிகள் குழுவின் தலைவியாக இருந்தார் பாஹிரதி, கடந்த 2005 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். அதன் பின்னர் கடந்த மாதம் 9 ஆம்தேதி இலங்கைக்கு திரும்பி வந்த அவர் மீண்டும் பிரான்சுக்கு திரும்பிச் செல்ல முயன்றபோது நேற்று தீவிரவாத தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிகின்றது.

English summary
41-year-old Burugesu Pahiradi, the former chief of the women's wing of the LTTE's Sea Tigers was arrested by the Terrorist Investigations Division.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X