ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகிறது.. ராஜபக்சேவின் "நாய் பேச்சுக்கு" விக்னேஸ்வரன் பதிலடி!
யாழ்ப்பாணம்: வைக்கோல் போரைக் காத்த நாய் போல வடக்கு மாகாண சபை இருக்கிறது இலங்கை அதிபர் ராஜபக்சே விமர்சித்ததற்கு அம்மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விக்னேஸ்வரன் பேசியதாவது:
மகிந்த ராஜபக்சே எங்கள் வடமாகாண மக்களையும் வடமாகாண சபையையும் நாய் என்று கூறியுள்ளார். எங்கள் வைக்கோல் போரின் ஒரு பகுதியை தீ வைத்து பொசுக்கியதால்தான் (யுத்தம் நடத்தியதால்) ஜெனீவாவில் விசாரணை நடக்கின்றது.

அதாவது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுவது போலத்தான் இருக்கின்றது ராஜபக்சேவின் பேச்சு. வடமாகாண மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களைப் போன்ற பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பார். அப்படி செய்யவில்லையே..
நாங்கள் இந்த வைக்கோல் போரை நாயாக இருந்து பராமரிப்போம். இந்த வடமாகாணம் என்கிற் இந்த வைக்கோல் போரை சில ஆடு, மாடுகள் (சிங்களவர்) மேய்ந்துவிடக் கூடாது என்பதற்காக நாயாக இருந்து பாதுகாப்போம்.
என்னை முட்டாள் விக்னேஸ்வரன் என்று இந்தியாவில் வாரண்ட் பிறப்பித்து தேடிக் கொண்டிருக்கும் டக்ளஸ் கூறியிருக்கிறார். தமிழகத்தில் தனி ஒரு இடத்தில் (சிறையில்) இருக்க வேண்டியவர். இலங்கையின் ஆண்ட அரசாங்கங்களை ஏமாற்றி தப்பித்துக் கொண்டிருக்கிறார்.
டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு செல்லப்பட்டால் நான் அவரைப் போல முட்டாள் என்றெல்லாம் அழைக்கமாட்டேன். முற்றிலும் பரிதாபம் காட்டவே முடியாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் என்று தான் குறிப்பிடுவேன்.
இவ்வாறு விக்னேஸ்வரன் பேசியுள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications