மக்கள் தொகையில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி..! சாதனை படைத்த நாடு எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் 80 சதவீதம் பேர் தடுப்பூசியை செலுத்தி கொண்டார்களாம்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினர் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். விரைவில் 100 சதத்தை எட்டிவிடுவோம் என்று அந்நாட்டு பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகை ஆட்கொண்ட கொரோனா தொற்று ஆஸ்திரேலிய நாட்டையும் விட்டு வைக்கவில்லை.. தொற்று பரவல் காரணமாக, கடந்த 18 மாதங்களாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இப்போது அந்நாட்டில் கொரோனா ஓரளவு மெல்ல மெல்ல குறைய தொடங்கி வரவும், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன..

 புது அறிவிப்பு

புது அறிவிப்பு

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்: கோவேக்சின், பிபிஐபிபி கார்வி ஆகிய தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படுகின்றன... இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தடையின்றி ஆஸ்திரேலியாவில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.. 2 டோஸ் கோவேக்சின் போட்டுக்கொண்ட 12 வயதுக்கு மேல் உள்ளவர்களும், 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பிபிஐபிபி கார்வி தடுப்பூசியின் 2 டோஸ் போட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

தடுப்பூசி

தடுப்பூசி

இது சர்வதேச மாணவர்கள் நாடு திரும்புவதற்கும், தொழிலாளர்கள் பயணம் செய்வதற்கும் வழிவகை செய்யும்... மேலும், நவம்பர் 1-ம்தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலியர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்கள் பயண விலக்கு பெறாமலே வெளிநாடுகளுக்கு செல்லலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஓரளவு நிம்மதியை பயணிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனராம்..

பெருமிதம்

பெருமிதம்

தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் முயற்சி என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். அங்கு நடத்தப்பட்ட பெரிய அளவிலான தடுப்பூசி இயக்கத்தில் இது ஒரு மைல்கல் என்றும் பிரதமர் பூரித்து சொல்கிறார். காரணம், கொரோனா வைரஸ் பரவலுக்கு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் நாடு தழுவிய போராட்டம் நடந்தது.. மெல்போர்னில் 3 ஆயிரம் பேர் திரண்டு நடத்திய போராட்டத்தில் கலவரங்களும் நடந்தது.

Recommended Video

    COVAXIN, COVISHIELD தடுப்பூசி பயனளிக்குமா? | Dr. Dr.Shanthi ravindranath Explain | Oneindia Tamil
    தடுப்பூசி

    தடுப்பூசி

    ஆஸ்திரேலியாவின் வடக்கு எல்லைகளிலும் மேற்கு ஆஸ்திரேலியாவிலும் 65 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்... அதேபோல நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா மாநிலங்களில் 82 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுள்ளனர்... 80 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+