"கத்துக்குட்டி".. முக்கிய வீரருக்கு "கல்தா".. இன்று ஆடும் இந்திய அணியின் பிளேயிங் 11 என்ன? பின்னணி
சிட்னி: உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்திற்கு எதிரான டி 20 போட்டியில் இன்று இந்திய அணி ஆட உள்ளது. முக்கியமான சில வீரர்களுக்கு இன்று அணியில் ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
உலகக் கோப்பை டி 20 2022 தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வென்றுவிட்டது.
முதல் போட்டியில் வென்ற நம்பிக்கையில் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.

மழை
முக்கியமாக மழை காரணமாக பல்வேறு போட்டியின் முடிவுகள் மாறி வருகின்றன. தென்னாப்பிரிக்கா ஆட வேண்டிய ஒரு போட்டி டிராவில் முடிந்தது. அதேபோல் நேற்று அயர்லாந்து - இங்கிலாந்து போட்டியில் மழை குறுக்கிட்டது. அதன் காரணமாக இங்கிலாந்து அந்த போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் இன்று இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்க உள்ளது.

உலகக் கோப்பை
பொதுவாக உலகக் கோப்பை தொடரில் கத்துக்குட்டி அணிகள் திடீரென வென்று ஷாக் கொடுக்கும். அதோடு டி 20 போட்டிகளில் இதுவரை நெதர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டதே இல்லை. அந்த அணியில் சில வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள். அதனால் இன்றைய போட்டியில் கத்துக்குட்டி அணியுடன் ஆடுகிறோம் என்று இல்லாமல் இந்திய அணி மிகவும் கவனமாக ஆட வேண்டும். ஒவ்வொரு புள்ளிகளும் இந்திய அணிக்கு முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான்
கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின் ஹர்திக் பாண்டியாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த காயம் உடனே ஆறிவிட்டது. அவர் தற்போது பிட்டாக இருக்கிறார். அணியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் அவர்களும் தற்போது முழு பிட்டாக உள்ளனர். பிசிசிஐ தகவல்படி அணியில் உள்ள 15 வீரர்களும் பிட்டாக உள்ளனர்.

ஹர்திக் பாண்டியா
இதனால் இன்று ஆடும் அணியில் காயம் காரணமாக யாரும் நீக்கப்பட வாய்ப்புகள் இல்லை. ஆனால் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக நெதர்லாந்து போட்டிதான் என்பதால் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஹர்திக் பாண்டியா போன்ற முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். தீபக் ஹூடா போன்றவர்களை களமிறக்கி முயற்சிகளை செய்ய வாய்ப்புகள் உள்ளன,

காயம்
இன்று ஆடும் இந்திய அணியில் பவுலிங்கில் வேறு மாற்றம் எதுவும் இருக்காது. ஓப்பனிங் வீரர் கே. எல் ராகுல் மோசமாக ஆடி வருகிறார். அவர் பார்மிற்கு திரும்ப இன்றைய போட்டி உதவும் என்பதால் இன்று அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். மற்றபடி அணியில் மாற்றங்கள் பெரிதாக இருக்காது. ரோஹித் சர்மா (சி), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா/ தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இன்று ஆட வாய்ப்புகள் உள்ளன.
-
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications