பகவத் கீதை மீது சத்தியபிரமாணம்.. ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தை திரும்ப வைத்த வருண் கோஷ்! யார் இவர்?
சிட்னி: ஆஸ்திரேலியாவில் செனட்டராக தேர்வு செய்யப்பட்ட அருண் கோஷ் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் தான் இந்திய வம்சாவளியான அருண் கோஷ் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்தவர் வருண் கோஷ். இவர் இந்தியாவில் பிறந்தவர். இவர் தனது 17 வது வயதில் பெற்றோருடன் ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று தற்போது அங்கேயே வசித்து வருகிறார்.

வருண் கோஷ் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். இவர் வாஷிங்டனில் உள்ள உலக வங்கியில் ஆலோசகராகவும் பணியாற்றினார். இவருக்கு அரசியலிலும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் செனட்டராக (எம்பி) அவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சென்ட்டராக நாடாளுமன்றத்தில் பதவியேற்று கொண்டார். அப்போது அவர் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் முதல் இந்திய வம்சாவளி செனட்டர் என்பதும், பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்த முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார். புதிய எம்பியாக பதவியேற்றுள்ள வருண் கோஷிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் உள்பட அமைச்சர்கள், எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகையில், ‛‛நீங்கள் எங்களுடன் இருப்பதில் அருமை'' என்றார்.
இதுபற்றி ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் கூறுகையில், ‛‛ தொழிலாளர் கட்சியின் சென்ட் குழுவில் நீங்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பகவத் கீதையில் முதல் முறையாக அவர் பதவியேற்றார். என்னை பொறுத்தமட்டில் எதிலும் முதலாவதாக இருப்பது என்பது அதில் உறுதியாக இருக்க வேண்டும். இவர் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு வலுவான குரலாக இருப்பார்'' என்றார்.
இதுபற்றி வருண் கோஷ் கூறுகையில், ‛‛நான் ஒரு நல்ல கல்வியை பெற்றுள்ளேன். உயர்தர கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications