For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.1.3 கோடி பண மோசடி: மாஜி ஐ.ஏ.எஸ் அதிகாரி, மகனை கைது செய்ய ஹைகோர்ட் உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1.3 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேகானந்தன் அவரது மகனை கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர், விவேகானந்தன்; இவரது மகன், கவின் விவேக். வேலை வாங்கி தருவதாக கூறி, 13 பேரிடம், 1.3 கோடி ரூபாய் பெற்றதாக, இவர்கள் மீது, சென்னை, திருமங்கலம் போலீசார், வழக்குப் பதிவு செய்தனர்.

புலன்விசாரணையின் போது, இவர்கள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில், சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இவர்களுக்கு எதிரான, 'பிடிவாரன்ட்' நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 'பிடிவாரன்ட்'டை அமல்படுத்தவும், இருவரையும் பிடித்து வரவும், திருமங்கலம் போலீசாருக்கு, உத்தரவிடக் கோரி, கணபதி என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

1.3 crore cheating case: HC orders arrest of ex-IAS officer, son

மனுவை விசாரித்த, நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடர்பாக, அதிகாரிகள் மட்டத்தில் இருந்து போலீசாருக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது. மேற்கொண்டு விசாரணை நடத்த அனுமதி கோரி போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை தெரிந்து கொண்டு பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தை அணுகி 'பிடிவாரன்ட்'டை அமல்படுத்த கோரி உள்ளார்.

திருமங்கலம் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் நிலவர அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.அந்த அறிக்கையில் 'குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் மேற்பார்வையிட வேண்டும். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வழக்கை நீதிமன்றம் கண்காணிப்பதால் மூன்று வாரங்களுக்கு பின் மீண்டும் பட்டியலிட வேண்டும். அப்போது போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி விசாரணை ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நிலுவையில் மிரட்டல் புகார்

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி விவேகானந்தன் மீது திருவான்மியூரைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் கடந்த ஆண்டு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரில் துரைப்பாக்கத்தில் உள்ள கட்டிடத்துக்கு 2 ஆண்டாக வாடகை தர மறுப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகன் கவினுடன் சேர்ந்து விவேகானந்தன் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். பணமோசடி வழக்கில் விவேகானந்தனும் அவரது மகனும் கைது செய்யப்பட்டால் மிரட்டல் வழக்கும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாமனிய மக்கள் என்றால் உடனடியாக கைது செய்யும் காவல்துறையினர், ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது என்று சமூக ஆர்வலர்கள்

English summary
The Madras high court has ordered the arrest of a recently retired IAS officer, D Vivekanandan, in a job racket, saying a serving bureaucrats' lobby may be try ng to torpedo the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X