உயர பறந்த தக்காளி.. ஒரு கிலோ 80 ரூபாய்? தங்கம் போல தக்காளியின் விலையும் எகிறுதே.. எப்போது குறையும்
சென்னை: ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலை ஓரளவு உயர்வது வழக்கமான ஒன்று தான் என்றாலும், நடப்பு நவம்பர் மாதத்திலேயே தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்சியடைய வைத்து வருகிறது. கடந்த மாதத்திற்கு முன்பு கிலோ தக்காளி 15-20 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 80 ரூபாயை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்?
மழைக்காலம் வந்தாலே தக்காளி விளைச்சல் பாதிப்படைந்துவிடும்.. இதனால் விலையும் 'கிடுகிடு'வென உயர்ந்துவிடும்.. மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததாகவும், அதனால் விலை குறையாமல் உள்ளதாகவும் கடந்த மாதம் முழுவதுமே வியாபாரிகள் கூறினார்கள்..

மழை - பயிர்கள் பாதிப்பு
இதற்கு பிறகு ஓரளவு வரத்து அதிகமாக துவங்கியதால், தக்காளி விலையிலும் மாற்றம் தென்பட்டது.. விலையும் குறைந்து பொதுமக்களும் இயல்பாக வாங்க துவங்கினர். ஆனால் தற்போது திடீரென விலைகள் உயர்ந்து விட்டன..
சமீப நாட்களாகவே பெய்து வரும் மழை, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விலை உயர்வு அதிகமாகி உள்ளது.
லாரிகளின் எண்ணிக்கை குறைவு
தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமே தக்காளியின் விலை உயர்ந்தே உள்ளது.. மழையால் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்து, விநியோகத்தில் நெருக்கடியை தந்துள்ளன. மேலும், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் லாரிகளின் எண்ணிக்கையும் பாதியாக குறைந்துவிட்டன..
மகாராஷ்டிரா போன்ற முக்கிய உற்பத்தி செய்யும் மாநிலங்களிலும் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வடஇந்தியாவிலேயே முக்கிய விநியோக மையமாக கருதப்படும் தலைநகர் டெல்லியில் தக்காளியின் விலை 26 சதவீதம் அதிகரித்துவிட்டதாம்.
தக்காளி விலை உயர்வு
அந்தவகையில் தற்போது இந்தியா முழுவதும் தக்காளி விலை கடந்த 10 நாட்களில் சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. பல இடங்களில் நல்ல தரமான தக்காளியின் விலை ஒரு கிலோ 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறார்கள்.
நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, அக்டோபர் 19 முதல் நவம்பர் 19 வரை இந்தியா முழுவதும் தக்காளியின் சராசரி சில்லறை விலை கிலோவுக்கு ரூ.36 லிருந்து ரூ.46 ஆக அதிகரித்துள்ளது. சண்டிகரில் 112% உயர்ந்துள்ளது.
அதேபோல கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மாதந்தோறும் 40% க்கும் அதிகமான உயர்வு காணப்பட்டுள்ளது. சில இடங்களில், நல்ல தரமான தக்காளி கிலோவுக்கு ரூ.80 வரை விற்கப்படுகிறது.
தமிழ்நாடு - தர்மபுரி மாவட்ட சந்தை
தமிழகத்தை பொறுத்தவரை, தர்மபுரி மாவட்டத்தில், தக்காளி அதிகம் விளைவிக்ககூடிய பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கனமழையால், தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளது...
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தையில் கடந்த 16ம் தேதி, ஒரு கிலோ தக்காளி, 28 ரூபாய் என விற்ற நிலையில் நேற்று முன்தினம் 36 ரூபாய் அதிகரித்து, நேற்று 38 ரூபாய் என்று ஒரேயடியாய் உயர்ந்துவிட்டது.. இதுவே வெளி மார்க்கெட்டில், ஒரு கிலோ தக்காளி, 50 முதல், 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒருசில இடங்களில், தரமான தக்காளி கிலோவுக்கு ரூ.80 வரை விற்கப்படுகிறது.
தக்காளியின் விலை குறையுமா
இனியும் மழைக்காலம் துவங்கி நடக்கும் என்பதால், பலரும் இப்போதே தக்காளியை வாங்கி வருகின்றனர்... ஏற்கனவே வரத்து குறைந்து நிலையில், பலரும் வாங்க முனைந்திருப்பதால், விரைவில் தக்காளிக்கு தட்டுப்பாடு வரலாம் என்றும், அப்போது தக்காளியின் விலை மேலும் உயரலாம் என்றும் காய்கறி வியாபாரிகள் கருதுகிறார்கள்..
அதுமட்டுமல்ல, இப்போது கல்யாண சீசன் ஆரம்பமாகி உள்ளதாலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா, பொங்கல் பண்டிகை போன்றவை வருவதாலும், தக்காளிக்கான தேவை அதிகரித்து, விலையும் கூடலாம் என்று வியாபாரிகள் கருதுகிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications