ராணிப்பேட்டையில் சோகம்.. டெங்கு காய்ச்சலால் 13 வயது சிறுவன் பலி
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளான்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்று அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சல் மக்களை பாதித்து வருகிறது.

இந்த டெங்கு காய்ச்சல் என்பது நல்ல நீரில் உருவாகும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்த கொசுக்கள் கடிப்பதால் தான் டெங்கு காய்ச்சல் என்பது ஏற்படுகிறது.
இந்நிலையில் தான் டெங்கு காய்ச்சலால் ராணிப்பேட்டையில் 13 வயது நிரம்பிய ஹரி என்ற சிறுவன் பலியாகி உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டார். தீவிர குளிர் காய்ச்சலால் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது டெங்கு பாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சிறுவன் ஹரி மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஹரி பலியாகி உள்ளார். இதையடுத்து சிறுவன் வசிக்கும் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
டெங்கு காய்ச்சலை மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் ஈஸியாக தடுக்கலாம். அதாவது டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எஜிப்டி கொசு மூலமாக தான் பரவும். டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும் போது, அவர்களுக்கும் டெங்கு பரவுகிறது. டெங்கு காய்ச்சலின்போது ரத்த தட்டையணுக்கள் குறைத்து உயிரை கொல்லும்.
டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசு பகலில் மட்டுமே மனிதர்களை கடிக்கும். ஏடிஸ் கொசு அதிகபட்சமாக 3 வாரம் உயிர் வாழும். ஆனால் அதற்குள் ஒரு கொசு நல்ல நீரில் நூற்றுக்கணக்கான முட்டைகளையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. இதுதான் மக்களுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
இதனால் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் இடங்களை அழிக்க வேண்டும். இதற்கு வீடு, பள்ளி, பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் மட்டுமே டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். காய்ச்சல், சோர்வு, தலைவலி,உடல் வலி,வாந்தி, எலும்பு வலி உள்ளிட்டவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் வந்தால் பொதுமக்கள் தாமதிக்காமல் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications