காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை எதிர்த்து சென்னையில் ரயில் மறியல்
சென்னை: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து 140 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் நடைபெறும் காமல்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகம், ஒருங்கிணைந்த அம்பேத்கர் இயக்கம் சார்பில் இன்று சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் கண்ணதாசன் தலைமையில் பெண்கள் உள்பட 50 பேர் தாம்பரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் ரயிலை மறித்து நின்றபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல, ஒருங்கிணைந்த அம்பேத்கர் மன்ற காஞ்சி மாவட்ட பொருளாளர் கோபிநாத் தலைமையில் 40 பேர் இன்று காலை 11 மணியளவில் குரோம் பேட்டையில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் 50 பேர் காலை 11.15 மணியளவில் பல்லாவரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பல்லாவரம் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications