18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு.. ஹைகோர்ட் 3வது நீதிபதி முன்னிலையில் நாளை விசாரணை! தப்புமா பதவி?
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர். சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்ற தலைமை நீதிபதி அவரது உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தார்.

3வது நீதிபதிக்கு மாற்றம்
ஆனால் மற்றொரு நீதிபதியான எம் சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தார். நீதிபதிகளின் இருவேறு மாறுபட்ட தீர்ப்பால் வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

விமலா நீக்கம்
நீதிபதி எஸ்.விமலா, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால் இதனை எதிர்த்து தினகரன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து 3வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.

நாளை மீண்டும் விசாரணை
இந்நிலையில் இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நேற்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் தலைமை பதிவாளரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

புயலை கிளப்புமா?
மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளார். வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்க உள்ளதால் 18 எம்எல்ஏக்களின் பதவி தப்புமா அல்லது தமிழக அரசியலில் புயலை கிளப்புமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications