போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த கூலித்தொழிலாளிகள் பலி.. கும்பகோணம் காவிரி கரையில் சடலம்
கும்பகோணம்: அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் உடன் போதை மாத்திரை கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் காவிரி ஆற்றங்கரையில் சடலமாக இருந்த இருவரின் உடல்களை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துரையில் இரண்டு பேர் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த பாலகுறு மற்றும் சவ்வுந்தரராஜ் என்பதும், அவர்கள் இருவரும் ஒன்றாக கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது. நேற்று இரவு இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதும் தெரிய வந்தது. மேலும் சடலத்திற்கு அருகே மதுபாட்டில்களும் சானிடைசர் பாட்டில்களும் கிடந்துள்ளன.

இதன் காரணமாக அவர்கள் இருவரும் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்தார்களா? அல்லது போலி மதுபானம் எதாவது குடித்து உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications