கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்! மேலும் இருவரை கைது செய்த சிபிசிஐடி போலீஸ்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் பலியான வழக்கில் இதுவரை 14 பேர் கைதான நிலையில் இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100 -க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலைக்கேற்ப அவர்கள் விழுப்புரம், சேலம், புதுவை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், மயக்கம், வயிற்று வலி, வயிற்று போக்கு, வாந்தி உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட 58 பேர் பலியாகிவிட்டனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களில் ஆபத்தான முறையில் சிலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவருடைய சகோதரர் தாமோதரன் , அவருடைய மனைவி சந்திரா ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தொடர் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார் வழக்கில் முக்கிய குற்றவாளியான சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்பவரை பண்ருட்டி அருகே கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மெத்தனால் விற்பனையில் தொடர்புடைய சங்கராபுரம் அரியூரை சேர்ந்த ஜோசப்ராஜா, லூர்துசாமி, சூசைநாதன், மாதவச்சேரி ராமர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரும், கடலூர் தம்பிப்பேட்டையைச் சேர்ந்த ராஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் தொடர்ச்சியாக மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் கைதாகி சிறை சென்று வெளிவந்த மாதேஷுக்கு மெத்தனால் வாங்க ஜிஎஸ்டி பில் அளித்து உதவியதாக பண்ருட்டியில் சிப்ஸ் கடை நடத்தி வந்த சக்திவேல், மீன் வியாபாரி கண்ணன் ஆகியோர் கைதாகியுள்ளனர். மேலும் சேலம் மாவட்டம் கருமந்துறை கல்லாநத்தம் சங்கர் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனைக்கு விருத்தாசலத்தில் இருந்து மூலப்பொருள் பெறப்பட்டதாக இருவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலை பிரிவில் அகல்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும் ஜோதிமணி, கேசவக்குமார் ஆகிய இருவரும் கள்ளச்சாராயத்தில் கலக்க பயன்படுத்தும் வேதிப்பொருளை மாதேஷுக்கும் வழங்கியதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து விருத்தாசலம் மதுவிலக்கு போலீஸார் இது குறித்து புகாரின் பேரில் ஜோதிமணி, கேசவக்குமாரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் இருவரும் மாதேஷிடம் இருந்து ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் வேதிப்பொருளை பெற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைதாகியுள்ள நிலையில் நேற்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவக்குமார், கதிரவன் ஆகிய இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அய்யாசாமி, தெய்வாரா ஆகிய இருவர் கைதாகியுள்ளனர். எனவே கள்ளச்சாராய வழக்கில் இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications