தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்திய ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள போதை புகையிலை பறிமுதல்
செங்கோட்டை: தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்திய ரூபாய் 20 இலட்சம் மதிப்புள்ள போதை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக கேரளா எல்லைப்பகுதியான செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் காய்கறி,அரிசி,உள்ளிட்ட முக்கிய பொருட்கள் ஏற்றி செல்லப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நள்ளிரவு நேரங்களில் போலீசாருக்கு தெரியாமல் இங்கிருந்து செல்லும் வாகனங்களில் ஏற்றி செல்லும் சரக்குகளுக்கு அடிப்பகுதியில் எரிசாராயம்,கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி செல்லும் கும்பல்கள் கேரளாவில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஆரியங்காவு மது விளக்கு சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் அஜித் குமார்,சப் இன்ஸ் பெக்டர் ரகுநாதன் ஆச்சாரி உள்ளிட்டோர் நடத்திய சோதனையில் தென்காசியிலிருந்து கொட்டாரக் கரைக்கு அரிசி ஏற்றி சென்ற லாரியில் கேரளாவில் தடை செய்யப்பட்ட 20 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளான புகையிலைப் பொருட்கள் சுமார் 16 மூட்டை இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர்.

அதனைக் கடத்தி வந்த தென்காசி அய்யபுரத்தை சார்ந்த கந்தசாமி மகன் ஓட்டுனர் முத்துராஜ்,அவருடன் இருந்த பிரானூர் பார்டர் சாகுல் கமீது மகன் பீர் முகமது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.அரிசி ஏற்றிவந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு












Click it and Unblock the Notifications