டாஸ்மாக்கிற்கே விபூதி.. ஓடும் லாரியில் 2160 மதுபாட்டில்களை திருடிய கும்பல்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி
கள்ளக்குறிச்சி: மதுபானங்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனத்தில் தார்பாயை பிரித்து 2160 மதுபாட்டில்களை திருடிய உசிலம்பட்டி கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டாஸ்மாக் குடோனில் இருந்து 770 மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வேலூருக்கு கடந்த 20-ந்தேதி லாரி புறப்பட்டு சென்றது. திருவண்ணா மலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள சூரியகுப்பத்தை சேர்ந்த 45 வயதாகும் முத்துமணி இந்த லாரியை எடுத்துக் கொண்டு வேலூருக்கு சென்றார்.

தஞ்சாவூர், உளுந்தூர் பேட்டை வழியாக வேலூர் நோக்கி சென்ற முத்துமணி, லாரியை உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூரில் நிறுத்தி விட்டு டீ குடித்துள்ளார். பின்னர் அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்றுள்ளார், காட்டுக்கோவில் அருகே சென்ற போது வயிறு பிரச்சினை ஏற்பட்டதால், லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.
பின்னர் முத்துமணி வந்து பார்த்த போது லாரியின் தார்ப்பாய் கிழிக்கப்ப ட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர், டாஸ்மாக் அதிகாரிகளிடம் கூறிவிட்டு லாரியை வேலூர் குடோனுக்கு எடுத்து சென்றார்.
அங்கு மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டியை ஊழியர்கள் இறக்கி உள்ளார்கள், அதில் 45 பெட்டிகள் மாயமானது தெரியவந்தது. அதிலிருந்த 2160 பாட்டில்கள் திருடு போயிருந்தது. உளுந்தூர்பேட்டை அருகே டீ குடிக்க நிறுத்திய இடத்தில் திருடு போயிருக்கலாம் என்று சந்தேகமடைந்த லாரி டிரைவர் முத்துமணி, இது தொடர்பாக எலவனா சூர்கோட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
லாரி டிரைவர் முத்துமணியின் புகாரின் பேரில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் 7 பேர் கொண்ட கும்பல் தார்ப்பாயை பிரித்து அதிலிருந்த மதுபான பாட்டில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளை கொள்ளையடித்ததை கண்டுபிடித்தனர். அதற்கு ஆம்னி வேனை பயன்படுத்தியதையும் கண்டுபிடித்தார்கள்.
இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி வழக்குப் பதிவு செய்த உளுந்தூர் பேட்டை பகுதி போலீசார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (37), விக்கிரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (35) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உசிலம்பட்டியை சேர்ந்த பொட்ராசு (45) என்பவர் தலைமையில் 7 பேர் மாருதி வேனில் பின் தொடர்ந்து திருடியது தெரியவந்தது.
எறையூரில் நின்றிருந்த லாரியில் மதுபான பாட்டில்களை தார் பாயை பிரித்து கொள்ளையடித்துவிட்டு, வேனில் ஏறி த சென்றுள்ளாரகள். திருடிய மதுபானங்களை சந்தோஷமாக குடித்த கும்பல் மீதி பாட்டில்களை பலருக்கும் விற்றுள்ளார்கள். இந்த திருட்டு கும்பலில் சிக்கியவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், மீதமுள்ளவர்களை பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications