துரைமுருகன், பொன்முடி, நேரு, பெரியசாமி உள்பட சிட்டிங் எம்எல்ஏக்கள் 23 பேருக்கு மீண்டும் வாய்ப்பு
சென்னை: திமுக வேட்பாளர்களில் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்பட சிட்டிங் சட்டசபை உறுப்பினர்கள் 23 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் கருணாநிதி நேற்று மாலை வெளியிட்டார். இதில் பல முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரிலும், அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூரில் போட்டியிடுகிறார். மேலும் பல முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
துரைமுருகன் - காட்பாடி
பொன்முடி - திருக்கோவிலூர்
கே.என்.நேரு - திருச்சி மேற்கு
ஐ.பெரியசாமி - ஆத்தூர்
ஏ.ம. வேலு - திருவண்ணாமலை
கே.கே.எஸ்.எஸ்.ஆர,ராமச்சந்திரன் - அருப்புக்கோட்டை
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் - குறிஞ்சிப்பாடி
கே.ஆர்.பெரியகருப்பன் - திருப்பத்தூர்
கு.பிச்சாண்டி - கீழ்பென்னாத்தூர்
கீதா ஜீவன் - தூத்துக்குடி
பூங்கோதை - ஆலங்குளம், உள்பட பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் டி.ஆர்.பி.ராஜா, தங்கம் தென்னரசு, உள்ளிட்ட 21 தற்போதைய எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் குன்னூர் தொகுதியின் தற்போதைய உறுப்பினர் பா.மு.முபாரக், பத்மநாபபுரம் உறுப்பினர் புஷ்ப லீலா ஆல்பன் ஆகியோருக்கு இடம் வழங்கப்படவில்லை.
பெரும்பாலானோருக்கு தாங்கள் போட்டியிட்ட வென்ற அதே தொகுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், குன்னம் தொகுதியின் தற்போதைய உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு அரியலூர் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேப்பனஹள்ளி உறுப்பினராக இருக்கும் டி.செங்குட்டுவனுக்கு கிருஷ்ணகிரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications