சிறுவாணி விவகாரம்: செப். 8-ல் கோவையில் மனித சங்கிலி, ரயில் மறியல் நடத்த 24 அமைப்புகள் முடிவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதைக் கண்டித்து செப்டம்பர் 8-ந் தேதி கோவையில் மனித சங்கிலி மற்றும் ரயில் மறியப் போராட்டங்கள் நடத்த 24 அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளாவின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் செப்டம்பர் 8-ந் தேதியன்று கோவையில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவது என்றும் கோவை செல்லும் அனைத்து ரயில்களையும் மறித்து போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவாணி விவகாரத்தில் கேரளாவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications