29% மழை மிஸ் ஆகிப் போச்சே... கவலையில் தமிழகம்
சென்னை: தமிழகத்தில், நடப்பு வட கிழக்குப் பருவ மழைக் காலத்தில், 29 சதவீத அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக பெய்திருக்க வேண்டிய மழையில் 29 சதவீதம் அளவுக்கு குறைவான மழை பெய்துள்ளது.
குறிப்பாக சென்னைக்குக் கிடைத்திருக்க வேண்டிய அளவுக்கு இந்த முறை மழை பெய்யவில்லை. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இது நிலைதான்.
மோசம் என்ற நிலையில்தான் வட கிழக்குப் பருவ மழைக்காலம் தமிழகத்தில் தொடங்கியது. ஆனால் தற்போது பரவாயில்லை என்ற அளவுக்கு வந்துள்ளது. ஆனால் பற்றாக்குறை என்னவோ கவலை தருவதாகவே உள்ளது.

40 சதவீத பற்றாக்குறை
அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் மத்தி வரையிலான காலகட்டத்தில் வட கிழக்குப் பருவமழையின் பற்றாக்குறை 40 சதவீதமாக இருந்தது.

இப்போது 29 சதவீதம்
ஆனால் ஞாயிற்றுக்கிழமை வரையிலான காலகட்டத்தில் பற்றாக்குறை அளவு 29 சதவீதமாக குறைந்துள்ளது.

மேலும் மழை வந்தால் நல்லது
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் ஜெனரல் ஒய்.இ.ஏ. ராஜ் கூறுகையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழை பெய்துள்ளது. குறைந்த காற்றழுத்தம் புதிதாக வரும்போது கூடுதல் மழை கிடைக்கும்.

தர்மபுரி- கோவையில் நல்ல மழை
இதுவரை இந்த பருவ மழைக்காலத்தில், தர்மபுரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே இயல்பான மழை பெய்துள்ளது. நீலகிரியில் கூட மழை பொய்த்து வி்ட்டது.

சென்னையில் 50 சதவீதம் குறைவு
சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவாரூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் 50 சதவீத அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

9 நாள் தாமதம்
வட கிழக்குப் பருவ மழை இந்த முறை 9 நாள் தாமதமாக வந்ததே இதற்குக் காரணம். சென்னைக்குப் போதிய மழை இந்த முறை கிடைக்கவில்லை.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்!












Click it and Unblock the Notifications