விடாமல் பெய்யும் மழை... அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்
சென்னை: வட கடலோரத் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘தென் மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் உருவான தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, இன்னும் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. அடுத்து வரும் 48 மணி நேரத்தில், அது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் (புயல் சின்னம்) என எதிர்பார்க்கிறோம். ஆனால் தற்போது இன்னும் அதே நிலையில்தான் நீடிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 20 மி.மீ, புதுச்சேரி மாநிலம் காரைக்கால், நாகை, பாம்பன் ஆகிய இடங்களில் தலா 10 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இடியுடன் கூடிய மழை:
வட கடலோரத் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே கன மழை பெய்யும். மேலும் கடலோரத் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பலத்த தரைக்காற்று வீசும்:
சென்னை மாநகரில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தரைக் காற்று பலமான வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:
வட தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், வடக்கு, வடகிழக்கு திசையிலிருந்தும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் வட மேற்கு, வடக்கு திசையிலிருந்தும், மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மீன் பிடிக்க செல்ல வேண்டாம்:
மேலும் ஆழ்கடல் பகுதிகளுக்குள் சென்று மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications