திமுகவை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2ஜி வழக்கு தொடரப்பட்டது.. ஸ்டாலின்
Recommended Video

சென்னை: 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி.கனிமொழி உள்ளிட்ட 14 விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் வரலாற்றில், ஒரு கட்சியை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பால் திமுக மீதான களங்கம் துடைக்கப்பட்டு விட்டது.

இந்த வழக்கின் விசாரணையின் போது ஊடகங்கள் எவ்வாறு இந்த வழக்கு குறித்து செய்திகளை ஆர்வத்துடன் வெளியிட்டதோ அதே ஆர்வத்துடன் இந்த தீர்ப்பு குறித்தும், திமுக மீதான களங்கம் துடைக்கப்பட்டது குறித்தும் செய்தி வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக தீர்ப்பு வெளியானவுடன் அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications