திருவண்ணாமலை கலெக்டரை தாக்க முயன்ற 3 பேர்.. மடக்கிப் பிடித்த போலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சித் தலைவரை தாக்க முயன்ற 3 பேரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

திருவண்ணாமலையில் புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இன்று மாலை தனது கலெக்டர் பங்களாவில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிவா, சந்தோஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்து கலெக்டர் பங்களாவினுள் அத்து மீறி குதித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை தாக்க முயற்சி செய்துள்ளனர்.

3 arrested for attempt to attack Thiruvannamalai collector

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மூன்று பேரையும் தடுத்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கலெக்டரை அவரது பங்களாவுக்குள் புகுந்தே தாக்க முயன்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
3 persons were arrested for attempting to attack Thiruvannamalai collector Kandasamy this evening.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற