சவூதி அரேபியாவில் வெளிநாட்டு கப்பல் மோதியதில் 3 தமிழக மீனவர்கள் பலி
சவூதி அரேபியாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது வெளிநாட்டுக் கப்பல் மோதியதில் படகு நொறுங்கியதுடன் நாகர்கோவில் மீனவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
நாகர்கோவில்: சவூதி அரேபியாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது வெளிநாட்டுக் கப்பல் மோதியதில் படகு நொறுங்கியதும் நாகர்கோவிலைச் சேர்ந்த 3 மீனவர்கள் பலியாகியுள்ளனர்.
நாகர்கோவிலை அடுத்த கேசவன்புத்தந்துரை மற்றும் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப் சுகந்தன், நெவில். இவர்கள் மீனவர்களாவர். இவர்கள் 3 பேரும் சவூதி அரேபியாவில் தரின் என்ற இடத்தில் விசைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெளிநாட்டுக் கப்பல் ஒன்று இவர்களது விசைப்படகு மீது மோதியது.

இதில் படகு நொறுங்கியதுடன் 3 பேரும் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்த மீனவர்களை மீட்டுத் தாருங்கள் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே படகு விபத்தில் ஒரு மீனவர் மட்டுமே உயிரிழந்ததாகவும் மற்ற 2 பேர் மாயமானதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் கேசவன்புத்தந்துரை மக்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசும், மத்திய அரசும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications