ஒரே பைக்கில் 5 பேர் பயணம்! பின்னால் வந்த எமன்! குழந்தை உள்பட 3 பேர் பலி! வந்தவாசியில் பெரும் சோகம்
வந்தவாசி: வந்தவாசி அருகே சாலை விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரு சக்கர வாகனத்தில் 5 பேர் பயணம் செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பழைய மும்முனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று ஆடி மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு வெடாலில் உள்ள அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ராஜசேகர், அவரது மனைவி பத்மா, மகள்கள் சுபாஷினி, மோகனா ஸ்ரீ மற்றும் மைத்துனி பானு என 5 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது கீழ்சாத்தமங்கலம் பைபாஸ் கூட்டுச் சாலை அருகே ஒரு வளைவில் திரும்பிய போது நிலைத்தடுமாறிய இரு சக்கர வாகனம் அங்கிருந்த சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது. அதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
பின்னர் அருகில் இருந்தோர் வந்து பார்த்த போது ராஜசேகரின் மைத்துனி பானுவும், மகள் மோகனா ஸ்ரீயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த ராஜசேகர், அவருடைய மனைவி பத்மா, மகள் சுபாஷினி ஆகிய மூன்று பேரையும் மீட்ட அப்பகுதியினர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுப்பி வைத்தனர்.
மூவரும் மேல்சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு ராஜசேகரும் உயிரிழந்தார். மேலும் பத்மாவுக்கு சுபாஷினிக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த பொன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications