தவாக மாவட்ட செயலாளரை கொலை செய்ய முயற்சி.. ரவுடிகளுக்கு அட்வான்ஸ் கொடுத்த புள்ளிகள்.. 3 பேர் கைது!
செங்கல்பட்டு: தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகியை கொலை செய்ய திட்டமிட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகனை கொல்ல செய்ய திட்டமிட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு திட்டமிட்ட தவாக மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவராக இருக்கிறார் வேல்முருகன். தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் உள்ளனர். இந்நிலையில் தவாக நிர்வாகியை கொலை செய்ய திட்டமிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவாக செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் முருகனை கொலை செய்ய, தவாக மாவட்ட துணை செயலாளர் மகேஷ், பம்மல் அஜித்குமார், காக்கா பாபு ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். ரவுடிகளிடம் ரூ. 1 லட்சம் முன்பணமாக கொடுத்து கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளிக்கரணையில் அண்மையில் நடந்த கட்சி கூட்டத்தில் முருகன் தரப்புக்கும், மகேஷ் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. உட்கட்சி மோதல் காரணமாக முருகனை கொலை செய்ய திட்டமிட்டு, மகேஷ் தரப்பு ரவுடிகளுக்கு பணம் கொடுத்த தகவல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications