திருச்சியில் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு
திருச்சியில் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video

திருச்சி: திருச்சியில் உள்ள 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
மலைக்கோட்டை அருகே உள்ள குளத்தெருவில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டடம் சினிமா விநியோகஸ்தர் கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

திருச்சியில் நேற்று கனமழை பெய்துள்ளதாலும், பக்கத்தில் இருந்த ஒரு வீடு இடிக்கப்பட்டதாலும் வலுவிழந்ததால் இந்த கட்டடம் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸாரும், மூன்று வாகனங்களில் வந்த 20 மீட்புப்படையினரும் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டட இடிபாடுகளில் 5 குடும்பங்களைச் சேர்ந்தோர் வசிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுவரை மீட்கப்பட்டுள்ளவர்களில் கார்த்திக் (45), ஹரீஷ் (6) ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். இருவரும் தந்தை- மகனாவர்.
இந்நிலையில் ராஜாத்தி, பழனி என்பவர்களும் இறந்துவிட்டனர். இந்நிலையில் ஒன்றரை வயது குழந்தை பரமேஸ்வரி உயிருடன் மீட்கப்பட்டார். எனினும் இவரது பெற்றோர் உயிரிழந்துவிட்டனர். இக்குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
மேலும் இந்த இடிபாடுகளுக்குள் உள்ளவர்களை உயிருடன் மீட்கும் பணியில் போலீஸார் மற்றும் மீட்புப்படையினருடன், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பத்தினர் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications