காய்கறிகளுக்கு அடியில் மறைத்து கடத்தப்பட்ட 30 இலட்சம் மதிப்புள்ள பான் மசாலா... 2 பேர் கைது
செங்கோட்டை அருகே சரக்கு வாகனம் மூலம் கடத்தப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா போதைப் பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்கோட்டை: செங்கோட்டை அருகே சரக்கு வாகனம் மூலம் கடத்தப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த இருவரையும் கைது செய்தனர்.
தமிழக கேரளா எல்லை பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக 4 வாகன சோதனை சாவடிகளை கடந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் பல்வேறு அத்தியாவசிய பொருள்களையும்,சரக்குக்களையம் ஏற்றி சென்றுவருகிறது.

இந்நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் தமிழகத்தில் இருந்து காய்கறிகள் ஏற்றிக் கொண்டு கேரளாவிற்கு சென்ற சரக்கு வாகனத்தில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது காய்கறிகளின் அடியில் 30 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கேரளாவில் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் புகையிலை பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பான் மசாலாவோடு அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீசார், அதில் பயணம் செய்த செங்கோட்டையை சார்ந்த கணேசன், மகேந்திரன் என்ற இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications