சென்னையில் 33 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்.. கமிஷ்னர் கரண் சின்ஹா அதிரடி உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 33 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து பெருநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி சென்னையில் பணிபுரிந்து வந்த 33 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து பெருநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா பிறப்பித்துள்ளார்.

 33 police inspectors to various place in chennai

இதுகுறித்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆர்.கே.நகர் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பிரபு மாம்பலம் காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாம்பலம் காவல் ஆணையராக பணிபுரிந்து வந்த ரவி பூக்கடை பஜாருக்கும், வளசரவாக்கத்தில் பணிபுரிந்து வந்த சந்துரு வடபழனிக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

வடபழனி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஆல்வின் ராஜ், வளசரவாக்கம் பகுதிக்கும், பூந்தமல்லி போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரிந்து வந்த முனியசாமி அம்பத்தூர் பகுதிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் சென்னையில் பணிபுரிந்து வந்த 33 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 33 police inspectors to various place in chennai

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai Police Commissioner Karan Singha has transfer to 33 police inspectors to various place in chennai
Please Wait while comments are loading...