கஸ்பாவில் "கசமுசா".. மேடம் பேரு "ஐஸ்வர்யா".. மொத்தம் 5 பேராமே.. போலீசுக்கே தலைசுத்திடுச்சு.. கன்றாவி
5 பேரை திருமணம் செய்த பெண் குறித்து போலீசார் பல அதிர்ச்சி தகவல்களை கூறுகிறார்கள்
திருப்பத்தூர்: வடிவேலு படத்தில் வருவது போலவே, ஒரு சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது.. 4 கல்யாணம் செய்த பெண் ஒருவர், 5வது கல்யாணம் செய்து கொள்ள ரெடியாகி கொண்டிருந்தார்.. கடைசியில் ஏடாகூடமாக சிக்கி கொண்டார்.. 5 பேரை சாய்த்த அந்த பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை அடுத்துள்ள கஸ்பா என்ற ஊர்.. இந்த ஊரில் வசித்து வந்துள்ளார் ஐஸ்வர்யா.. இவரது பெற்றோர், குடும்பத்தினர் பற்றின தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
ஆனால், இவருக்கு திருமணமாகிவிட்டது.. முதன்முதலில் மூர்த்தி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.. கரும்பூர் என்ற பகுதியை சேர்ந்தவராம் மூர்த்தி..

ஹைலைட்
ஆனால், இந்த திருமணத்தை ஐஸ்வர்யாவே செய்து கொண்டதாக தெரிகிறது.. இதற்கு அடுத்தபடியாக, கஸ்பா பகுதியில் பாபு என்பவரை திருமணம் செய்துள்ளார்.. ஆனால், பாபுவை விட்டு பிரிந்தார்.. அடுத்தபடியாக சண்முகசுந்தரம் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.. அடுத்ததாக அசோகன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.. இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், இத்தனை பேரை திருமணம் செய்து கொண்ட விஷயம், ஒருவருக்கு ஒருவர் தெரியாமலும் அந்த பெண் கவனமாக பார்த்து கொண்டாராம்..

ஜாலி
இவர்கள் 5 பேருமே அதே பகுதியில் வசித்து வந்திருக்கிறார்கள்.. ஆனால், தனித்தனித்தனியாக திருமணம் செய்து கொண்டு, தனிகுடும்பம் நடத்தி வந்துள்ளார்.. திருமணம் முடிந்ததும் அவர்களுடன் ஜாலியாக இருப்பாராம் ஐஸ்வர்யா.. பிறகு ஒவ்வொருவரிடம் இருந்தும் குறைந்தது 10 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் வரை, பெற்றுக் கொண்டுள்ளார்.. 4 பேரையும் அப்படித்தான் ஏமாற்றி உள்ளார்.. அடுத்ததாக 5வது திருமணத்துக்கு ரெடியாகி உள்ளார்..

4 + 1
மாதனூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வலையை வீச, அந்த வலையில் மாதவனூர் மாப்பிள்ளையும் விழுந்துவிட்டார்.. திருமணத்துக்கு ஜரூர் வேலைகள் நடந்துகொண்டிருந்தது.. அப்போதுதான், 4 கணவர்களுக்கும் ஐஸ்வர்யாவின் 5வது திருமணம் பற்றி தனித்தனியாக தெரியவந்துள்ளது.. இதனால் 4 பேருமே அதிர்ந்துபோய், 4 பேருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்கள்.. ஐஸ்வர்யா மீது தனித்தனியாக புகாரையும் தந்துள்ளனர்..

ஹேப்பி ஐஸ்வர்யா
இந்த புகார்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. 4 பேரையுமே திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்று ஐஸ்வர்யா போலீசில் சொன்னாராம்.. எங்களிடமிருந்து பறித்த பணம் & நகையை ஐஸ்வர்யாவிடம் இருந்து பெற்று தாருங்கள் என்று 4 பேரும் போலீசில் கேட்டுக் கொண்டார்களாம்.. ஐஸ்வர்யாவும், அந்த பணம், நகையை 4 பேருக்கும் தருவதாக சம்மதம் சொல்லி , அடுத்த ஒரு சில மாதத்திற்குள் அவைகளை 4 கணவர்களிடமும் கொடுத்துள்ளார்..

5வது தியாகி
அதை பெற்றுக்கொண்ட 4 பேரும், ஐஸ்வர்யாவை திரும்பி கூட பார்க்காமல் சென்றுவிட்டார்கள்.. விவகாரம் இத்துடன் முடியவில்லை.. மாதனூர் மாப்பிள்ளையை 5வதாக திருமணம் செய்து கொண்டாராம் ஐஸ்வர்யா.. 35 வயதுதான் ஆகிறது ஐஸ்வர்யாவுக்கு.. அதற்குள் 5 திருமணம் நடந்துமுடிந்துவிட்டது.. மாதனூரில் இருந்து ஐஸ்வர்யாவுக்கு வாக்கப்பட்டுள்ளவர் பெயர் ராமமூர்த்தி.. 36 வயதாகிறதாம்.. 4 திருமணம் செய்தவர் என்று தெரிந்தும், ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளார் என்றால் எப்பேர்பட்ட "தியாகி" அவர்???












Click it and Unblock the Notifications