டிவி விவாதங்களில் ஒரே கட்சியை சேர்ந்த 4 பேர் பங்கேற்பு.... சந்தி சிரிக்கும் அதிமுக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி விவாதங்களில் 4 வகையான கட்சிகள் கலந்து கொண்ட காலம் போய் தற்போது ஒரே கட்சியை சேர்ந்த 4 பேர் கலந்து கொண்டது குறித்து டுவிட்டரில் கிண்டல் அடித்து வருகின்றனர்.

முன்பெல்லாம் நாட்டில் நடைபெறும் எந்த ஒரு விவகாரங்களை மறுநாள் வெளியாகும் செய்தித் தாள்களில் தான் மக்களுக்கு தெரியவரும். அதைத் தொடர்ந்து தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்தி சேனல்கள் வந்தவுடன் செய்திகள் உடனுக்குடன் மக்களை சென்றடைந்தன.

தற்போது நாட்டில் நடைபெறும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது நடந்த அடுத்த நிமிடமே டிவிகளில் விவாதப் பொருளாகி வருகின்றன. இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, நெறியாளர், பொதுவானவர், அரசியல் விமர்சகர் உள்ளிட்டோர் இருப்பர்.

யார் யார் பங்கேற்பர்?

யார் யார் பங்கேற்பர்?

ஆளும் கட்சி கொண்டு வந்த திட்டங்கள் குறித்து ஆளும் கட்சி நபரும், அதில் உள்ள பாதகங்கள் குறித்து எதிர்க்கட்சியை சேர்ந்த நபரும், இரண்டுக்கும் பொதுவான உள்ள கருத்துகளை குறித்து நடுநிலைவாதியும் எடுத்துரைப்பர்.

அதிமுகவில் பிளவு

அதிமுகவில் பிளவு

ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக 2 ஆக பிளவுப்பட்டது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இருந்தன. அந்த அணிகளை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு விஷயங்கள் நடந்து விட்டன.

கோதாவில் தீபா

கோதாவில் தீபா

இதனால் அதிமுகவில் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி, தினகரன் அணி ஆகிய 3 பிளவுப்பட்டது. இந்நிலையில் இரட்டை இலை சின்னமும் , அதிமுகவும், தனக்கு தான் என்றும், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தான்தான் என்றும் தீபாவும் கங்கணம் கட்டி கொண்டார்.

நாறுகிறது அதிமுக

இந்நிலையில் தனியார் தொலைகாட்சி டிவியில் நடைபெற்ற விவாதத்தில் ஒரே கட்சியை சேர்ந்த 4 வந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாலு கட்சி காரங்க விவாதத்தில் பங்கேற்ற காலம் போய் ஒரே கட்சியிலிருந்து நாலு பேரு பங்கேற்கிற நிலைமைக்கு வந்துடுச்சு ஆத்தாவின் அதிமுக! என்று டுவிட்டரில் கலாய்த்து வருகின்றனர். இதுக்கே இப்படி இன்னும் அதிமுக 6 அணிகளாக உடையும் என்று ஒரு ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருந்தார். அவ்வாறு ஆனால் 6 பேர் விவாதத்தில் ஈடுபடுவர் போல.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A twitter comment which shows that 4 members from same party are participated in TV Debate.
Please Wait while comments are loading...