பஸ் பயணியிடம் ரூ. 8 லட்சத்தைப் பறித்து பங்கு போட்ட 4 போலீசார்!
தருமபுரி: தருமபுரி பேருந்து பயணியிடம் பணம் பறித்த போலீஸார் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் செம்மரக் கட்டைகள் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, தலைமைக் காவலர்கள் 4 பேர் கொண்ட தனிப் படையை அமைத்தனர்.
அவர்களைக்கொண்டு, மாவட்டத்தில் செம்மரக்கடத்தல் குறித்த நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெ.லோகநாதன் ஏற்பாடுகளை செய்துள்ளார்.
தனியார் பேருந்தில் சோதனை:
இந்த தனிப் படை போலீஸார் கடந்த சில நாள்களுக்கு முன்பு பென்னாகரத்திலிருந்து ஒகேனக்கல்லுக்கு சென்ற தனியார் பேருந்தில் சோதனையிட்டனர்.
செம்மரக்கடத்தல் குழு:
அந்தப் பேருந்தில் பயணம் செய்த செம்மரக்கடத்தல் குழுவுக்கு மரம் வெட்ட ஆட்களை அனுப்பிவைக்கும் வடிவேல் ரூபாய் 8 லட்சத்தை கொண்டு சென்றுள்ளார்.
8 லட்ச ரூபாய் பறிமுதல்:
தனிப்படை போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி, ரூபாய் 8 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பணத்தை பறித்துக்கொண்ட பின்னர் இந்த நால்வரும் செம்மரக்கடத்தல் கும்பலுக்கு உதவியும் செய்தனர்.
5 லட்சம் பங்கீடு:
வழக்கு விசாரணையில், பேருந்தில் வந்த வடிவேலுவிடமிருந்து ரூபாய் 3 லட்சத்தை மட்டுமே பறிமுதல் செய்ததாக கணக்கு காட்டிய தனிப் படை போலீஸார், மீதமுள்ள ரூபாய் 5 லட்சத்தை தாங்களே பங்கிட்டுக் கொண்டனராம்.
விசாரணையில் அம்பலம்:
இதுகுறித்து மாவட்ட எஸ்.பிக்கு உளவுப் பிரிவு போலீஸார் மூலம் தகவல் தெரிய வந்தது. அதன்பேரில், நடைபெற்ற விசாரணையில் தனிப்படை போலீஸார் நால்வரும் பணத்தை பங்குபோட்டுக் கொண்டது தெரிய வந்தது.
பணியிடைநீக்கம்:
மேலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, தலைமைக் காவலர்களான சேகர், மற்றொரு சேகர், சாரதி, காவலர் ஜீவா ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. ஜெ.லோகநாதன் உத்தரவிட்டார்.
விசாரணை தீவிரம்:
மேலும், இந்த முறைகேட்டில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications