விபத்தில் 5 வயது குழந்தை பலி.. லாரிக்கு தீ வைப்பு.. சாலை மறியல்.. சென்னையில் பரபரப்பு
சென்னையில் விபத்து ஏற்படுத்திய லாரியை பொது மக்கள் தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்னை வியாசர்பாடி வேகமாக வந்த லாரி மோதியதில் 4 வயது குழந்தை பலியாகினார். இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் ஜெயக்குமார் பெயிண்டராக உள்ளார். இவர் நேற்று இரவு தனது 5 வயது மகள் பிரியதர்ஷியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். வியாசர்பாடி நரசிம்மபுரம் அருகே சென்றுகொண்டிருந்த போது, ஆந்திராவில் இருந்து கட்டுமான பொருட்கள் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி ஒன்று ஜெயக்குமாரின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஜெயக்குமாரும், அவரது குழந்தை பிரியதர்ஷினியும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது குழந்தை பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே பலியாகியது தெரியவந்தது. இதையடுத்து லாரியை ஓட்டியவந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் லாரியை தீ வைத்து கொளுத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதி வழியாக 3 லாரிகள் மீது கல்வீசியும் தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதன் பின்னர் உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications