சென்னை கார் ஷோரூமில் சொகுசு கார்களை திருடிய வழக்கு: 5 பேர் கைது
சென்னை: சென்னை மணப்பாக்கத்தில் கார் குடோனில் 7 சொகுசு கார்கள் திருடப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த கார் கடத்திய கும்பலை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று இரவு கடத்தல் கும்பலைச் சேர்ந்த மணிகண்டன், விஜயா, வினோத், மணி, ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மணப்பாக்கத்தில் இருந்த பிரபல கார் ஷோரூமை தொடர்ந்து கண்காணித்த கொள்ளை கும்பல் ஒன்று 8ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் ஷோரூம் காவலாளியை தாக்கி ஷட்டரை உடைத்து 7 கார்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காவலாளியிடம் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து இந்த கொள்ளை குறித்து சென்னை முழுவதும் உள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாகன சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ராய்லான் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 கார்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்கு விரைந்த போலீசார் ஷோரூம் தொழிலாளர்களுக்கு தகவல் கொடுத்து கார்கள் தங்களுடையது தான் என்று உறுதிபடுத்தினர். ஆனால் கொள்ளையர்கள் காரில் போலீயான நம்பர் பிளேட்டுகளை பொருத்தியுள்ளனர். இந்நிலையில் கார் திருடிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மணிகண்டன், விஜயா, வினோத், மணி, ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications