கடனை வசூலிக்க பூட்டை உடைத்து வீட்டை சூறையாடிய கந்துவட்டிக் கும்பல்
திருப்பூர்: வீட்டின் மீது கொடுத்த கடனை வசூலிக்கும் விதமாக பூட்டிய வீட்டை உடைத்து உள்ளிருந்த பொருட்களை தெருவில் வீசியதாக கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த 5 பேரை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர், விஜயாபுரம் பழனியம்மாள் நகர் முதல்வீதியைச் சேர்ந்த மோகன் (வயது-48), பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா. (வயது-38) இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த ஞாயிறன்று மோகனின் முதல் மகள் ஐஸ்வர்யாவுக்கு கேரளாவில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக மோகன் குடும்பத்தார் கேரளா சென்றிருந்தனர்.
இதனை அறிந்து கொண்ட கந்துவட்டிக் கும்பல் ஒன்று, கடந்த சனிக்கிழமையன்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருள்களை வெளியில் தூக்கியெறிந்து விடு வீட்டை ஆக்கிரமித்தனர்.
அக்கம்பக்கத்தார் கொடுத்த தகவலின் பேரில், இது தொடர்பாக மோகன் தொலைபேசி வாயிலாக திருப்பூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
விரைந்து செயல்பட்ட போலீசார் இது தொடர்பாக, திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ செந்தில்குமார் (வயது-20), பொன்னாபுரம் செந்தில் குமார் (வயது-25), கரூர், அரவக்குறிச்சி கோபால் (வயது-36), விஜயாபுரம் சுதாகர் (வயது-28) ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோகனின் மனைவி அம்பிகா, இராக்கியாபாளையம் பிரிவைச் சேர்ந்த கந்துவட்டிக்காரர் தண்டபாணி என்பவரிடம் ரூ. 3.5 லட்சம் கடன் வாங்கியிருந்தாகவும், வாங்கிய கடனுக்காக அம்பிகா தனது வீட்டை தண்டபாணிக்கு பொது அதிகாரப் பத்திரம் செய்து கொடுத்திருந்ததாகவும், . வாங்கிய கடனுக்கு வட்டியும், அசலும் கொடுக்காததால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணையில் உள்ளது என்பதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று தலைமறைவான தண்டபாணியை கைது செய்த போலீஸார், வீட்டையும் மீட்டு மோகனிடம் ஒப்படைந்த்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications