அருப்புக்கோட்டை பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. சிறுவன் உள்பட 5 பேர் கைது.. மேலும் இருவருக்கு வலை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்திச் சென்று நகையை பறித்ததுடன் 7 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தனது உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த 22 ஆம் தேதி விருதுநகர் சென்றார். இதையடுத்து மீண்டும் அருப்புக்கோட்டை செல்வதற்காக விருதுநகரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக காரில் அந்த பெண்ணுக்கு தெரிந்த ஒரு நபர் வந்துள்ளார். உடனே அவர் தானும் ஊருக்குதான் செல்கிறேன், உன்னை அந்த வழியில் இறக்கிவிடுகிறேன், என கூறி அந்த பெண்ணை காரில் ஏற்றியுள்ளார்.

அருப்புக்கோட்டை கோபாலபுரம் சாலை
அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கோபாலபுரம் சாலையில் அந்த கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு இடத்தில் கார் நிறுத்தப்பட்டு அந்த பெண்ணும் அவரை அழைத்து வந்தவரும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து 7 பேர் பைக் மற்றும் வேறு ஒரு காரில் அவ்வழியாக வந்துள்ளனர்.

கடும் தாக்குதல்
உடனே அந்த பெண்ணையும் அவருடன் வந்தவரையும் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிகிறது. பின்னர் அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்று ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்திற்கு அந்த 7 பேரும் கடத்தி சென்றனர். அங்கு அவர்கள் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம்.

பெண் கடத்தப்பட்டது குறித்து புகார்
இதனிடையேஅந்த பெண் கடத்தப்படுவதை ஒருவர் பார்த்துள்ளார். அவர் அருப்புக்கோட்டை டவுன் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டனர். அதில் ஒரு பெண்ணை ஒரு கும்பல் கடத்தி சென்றது தெரியவந்தது.

கூட்டு பலாத்காரம்
இதையடுத்து அந்த கும்பல் பலாத்காரம் செய்த அந்த பெண்ணை கடத்திய இடத்திலேயே காரில் கொண்டு வந்து கீழே தள்ளிவிட்டு செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸார் விரைந்தனர். அப்போது அங்கிருந்து 7 பேர் தப்பியோட முயற்சித்தனர். அவர்களில் 5 பேரை கைது செய்தனர். மற்ற இருவர் தப்பியோடிவிட்டனர்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை
பின்னர் அந்த பெண்ணை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் கூட்டு பலாத்காரம் குறித்து அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

5 பேர் கைது
பிடிபட்ட 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சீனிவாசன் (42), ஜெயக்குமார் (23), ராம்குமார் (20), அழகுமுத்து (19) மற்றும் ஒரு சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள், நகை ஆகியவற்றையும் பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications