For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீருமா குழப்பம்.. மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு.. நாளை 3வது நீதிபதியின் தீர்ப்பு

மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்தனர். 3வது நீதிபதி சத்தியநாராயணனிடம் சென்றுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ மேற்படிப்பு படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிகளின்படி தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிப்படியே அரசு மருத்துவர்களின் சேர்க்கை இருக்கும் என்று தீர்ப்பு கூறினார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சென்றது. அங்கு விசாரணைகள் நடைபெற்றன.

மாறுபட்ட தீர்ப்பு

மாறுபட்ட தீர்ப்பு

இந்நிலையில், கடந்த 3ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு தீர்வு எட்டப்படும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், நீதிபதிகளின் இரு வேறுபட்ட கருத்துக்களால் 50 சதவீத இடஒதுக்கீட்டில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் மருத்துவ மாணவர்களின் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.

தீர்ப்பு விவரம்

தீர்ப்பு விவரம்

50 சதவீத இடஒதுக்கீடு வழக்கை நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்தனர். அவர்களில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி சசிதரன் தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதியான சுப்பிரமணியன் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார்.

3வது நீதிபதி

3வது நீதிபதி

இந்த மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு 3வது நீதிபதியிடம் சென்றது. 3வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார். அவர் முன்னிலையில் நேற்று விசாரணை தொடங்கியது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.வில்சன், திலகவதி, வக்கீல் எல்.சந்திரகுமார், சங்கரன், தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் மூத்த வக்கீல் விஜயநாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

நாளை தீர்ப்பு

நாளை தீர்ப்பு

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தது. இதன் முடிவில் இன்றே 3வது நீதிபதியின் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நாளை தீர்ப்பு கூற உள்ளதாக நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார். இவர் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்துத்தான், 50 சதவீத இடஒதுக்கீட்டில் முடிவான முடிவு தெரியும் என்ற நிலையில், மருத்தவ மாணவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

English summary
50 % Reservation for medical officers in PG courses case verdict will be given today by 3rd Judge Sathyanarayanan in the Madras High court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X