போலாம் ரைட்டு.. பஸ்ஸில் போறீங்களா.. பயணிகளுக்கு இதோ வந்தாச்சு செம அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி
கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலைமோத துவங்கிவிட்டன. இனி அடுத்தடுத்து வரும் நாட்களில் பயணிகளின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.. அதனால், சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம், போக்குவரத்து துறைக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், திங்கள் முதல் வியாழக்கிழமை வரை அரசு பஸ்கள் காலியாக ஓடுகின்றன.. இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் பஸ்களில் கூட்டம் நிரம்புகிறது... இப்படிப்பட்ட சூழலில்தான், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. அதாவது, நீண்ட தூரத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யவும், ஆம்னி பஸ் பயணிகளை இழுக்கவும் இந்த பயண சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விரைவு பஸ்கள்: அதன்படி, அரசு விரைவு பஸ்களில் ஒரு மாதத்திற்கு 5 முறை பயணம் செய்த பிறகு 6-வது முறை பயணத்தில் இருந்து ஒவ்வொரு பயணத்திற்கும் 50 சதவீத கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த சலுகையை சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருக்கிறார்.. அதாவது, 5 முறை பயணம் செய்வதற்கு, எந்தவிதமான சலுகையும் கிடையாது... அதற்கு மேல் பயணம் செய்யும் ஒவ்வொரு முறைக்கும், பாதி கட்டணம் செலுத்தினால் போதுமாம். ஆனால், ஒரே இடத்திற்கு, இந்த பயணம் அமைய வேண்டும்.
உதாரணத்திற்கு சென்னையில் இருந்து மதுரை செல்வதாக இருந்தால் அங்கிருந்து சென்னை மட்டுமே வர வேண்டும்... பயணம் செய்யும் மாறாமல், ஒரே இடமாக இருந்தால் மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும்.. இடம் மாறினால் பாதி கட்டண சலுகை கிடைக்காது.. அதேபோல, எந்த பெயரில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறதோ அதே பெயரில் தான் தொடர்ந்து ரிசர்வேஷன் செய்ய வேண்டும். பெயர்களை மாற்றினாலும் கட்டண சலுகை பெற இயலாது...
அதிரடி சலுகை: அதற்கேற்றவாறுதான் சாப்ட்வேர்கள் பொருத்தப்பட்டு வருகிறதாம்.. இந்த சலுகையானது, ஏசி பஸ் உட்பட எல்லா விரைவு பஸ்களுக்கும் பொருந்தும் என்றும், கோடை காலம் துவங்கிவிட்டதால், இப்போதே இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. அதனால், இதற்கான சாப்ட்வேர் பொறுத்தும் பணியும் துரிதமாக நடந்து வரும்நிலையில், அடுத்த ஒருசில நாட்களில் முடிவடையும் என்கிறார்கள். இதனிடையே இன்னொரு அறிவிப்பையும் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது..
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 21, 22ம் தேதி கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.. அதாவது, இந்த வார இறுதி நாட்களில் ரம்ஜான் பண்டிகை வருவதால் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை விடப்படும். அதனால் விடுமுறை தினத்தை தங்களுடைய சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக கிளம்பி செல்ல திட்டமிட்டு வருகிறார்கள்.. எனவே பஸ்களில் கூட்டம் அலை மோதி சிரமம் ஏற்படும் என்பதாலேயே, இதை தவிர்க்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்பெஷல் பஸ்கள்: ரம்ஜான் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 21,22ம் தேதி தமிழகத்தில் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் 500 இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது... இதன் மூலம் விடுமுறை காலங்களில் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலையும் தவிர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications