சேலம் அருகே அரசுப் பேருந்தும் மணல் லாரியும் மோதி விபத்து- 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே அரசுப் பேருந்தும் மணல் லாரியும் மோதிக் கொண்டதில் 6 பேர் பலியாகி உள்ளனர். இவ்விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சேலம் அருகே தொப்பூரில் அரசுப் பேருந்து மீது இன்று காலை மணல் லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications