ஐஸ்வர்யா வீட்டை தொடர்ந்து யேசுதாஸ் மகன் விஜய் வீட்டிலும் 60 சவரன் தங்கம், வைர நகைகள் மாயம்
சென்னை: பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸின் வீட்டிலும் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என அவருடைய மனைவி தர்ஷனா பாலா சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ், பிராமபுரத்தில் மனைவி தர்ஷனா பாலாவுடன் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த யேசுதாஸ் மருமகள் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தனது புகாரில் வீட்டில் இருந்த 60 சவரன் நகைகளை காணவில்லை. வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் இருக்கிறது என புகார் அளித்துள்ளார். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் தங்கம், வைரம் திருட்டை போல் யேசுதாஸ் மகன் வீட்டிலும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications