இரவோடு இரவாக பரபரப்பு.. தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்த இலங்கை கடற்படை.. நடுக்கடலில் திக்திக்
மயிலாடுதுறை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி மீனவர்களைக் கைது செய்யும் அட்டூழியத்தில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அப்படித் தான் மயிலாடுதுறையைச் சேர்ந்த 7 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. மேலும், அவர்கள் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போதெல்லாம் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி, இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இடையில் இந்த அத்துமீறல்கள் சில காலம் நின்றிருந்த நிலையில், மீண்டும் கடந்த சில நாட்களாகவே இந்தப் போக்கு ஆரம்பித்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி தமிழக மீனவர்களைக் கைது செய்யும் இலங்கை கடற்படை அவர்களைத் தேவையே இல்லாமல் பல மாதங்கள் சிறையில் தள்ளுகிறது. அவர்கள் ரிலீஸ் செய்யப்பட்டாலும் கூட அவர்கள் படகுகளை இலங்கை நாட்டுடைமை ஆக்கிவிடுகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும்போது தமிழக அரசில் இருந்து மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. அதற்குப் பதிலாக மத்திய அரசு நேரடியாக இதில் தலையிட்டு இலங்கை அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது இலங்கை கடற்படை. எல்லை தாண்டி மீன்பிடித்தாக சொல்லி 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த மீனவர்கள் அனைவரும் மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் ஆகும். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்தாக கைது செய்திருக்கிறது.
கைது செய்தது மட்டுமின்றி, 2 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications