காட்டுமன்னார்கோவில்: குறுங்குடி கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பெண்கள் இன்று உயிரிழந்தனர்.
குறுங்குடி கிராமத்தில் வெடிமருந்து கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் பெண்கள் பலர் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் திடீரென வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு வெடிமருந்து வெடித்து சிதறியது. இதில் அந்த வெடிமருந்து கிடங்கு தரைமட்டமானது.

கிடங்கில் பணியாற்றிய 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.













Click it and Unblock the Notifications