For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2009 லோக்சபா தேர்தலைப் போலவே!

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தல் வரலாற்றில் கடந்த லோக்சபா தேர்தலைவிட ஜஸ்ட் கொஞ்சம் குறைவான வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த தேர்தலில் 72.98% வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போதைய தேர்தலில் 72.83% வாக்குகள் பதிவாகி உள்ளன.

இருப்பினும் இன்னும் முழுமையான வாக்குப்பதிவு சதவீதம் வரவில்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியிருப்பதால் கடந்த தேர்தல் அளவுக்கே இந்த முறையும் வாக்குப்பதிவு அமைய வாய்ப்புளளது.

தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

72.83% pc polling in Tamil Nadu

வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். கிராம பகுதி மக்கள் ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தன.

கடந்த 2009ம் ஆண்டு நடந்த தேர்தலி்ல் தமிழகத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை 72.98% ஆகும். 2011ல் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 77.8% ஆகும். இதுதான் தமிழகத்திலேயே அதிக அளவில் பதிவான வாக்குப் பதிவாகும்.

இதற்கு முன்பு 1967ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது 76.57% பதிவாகியிருந்தன. தமிழகத்தில் இதுவரையிலான தேர்தல்களும் வாக்குப் பதிவு சதவீதமும்:

1952 - 57.89%

1957 - 47.71%

1962 - 68.77%

1967 - 76.59%

1971 - 71..83%

1977 - 67.14%

1980 - 66.76%

1984 - 73.09%

1989 - 66.87%

1991 - 63.92%

1996 - 66.94%

1998 - 57.95%

1999 - 57. 98%

2004 - 60.81%

2009 - 72.98%

அதாவது கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் ஜஸ்ட் கொஞ்சம் கொஞ்சூண்டு குறைவாக அதாவது 72.83% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. அநேகமாக இது நாளைக்குள் மாறலாம்.

English summary
Tamil Nadu records 72.83% percent turnout for 39 seats in Lok Sabha elections. Tamil Nadu recorded a polling percentage of 72.98%, in 2009 Lok Sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X