கும்பகோணம் அருகே பட்டாசு தயாரித்த போது விபத்து- 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: கும்பகோணம் அருகே பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உடல் சிதறி பலியாகினர்.
கும்பகோணத்தை அருகே அணைக்கரையை அடுத்த ஒழுகசேரியில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை பட்டாசுகளை தயாரித்தபோது திடீரென விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அத்துடன் பட்டாசு தயாரித்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில்12 பேர் படுகாயமடைந்தனர்.
இடிபாடுகளில் சிக்கியோரை மீட்க தீயணைத்துறையினர் போராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications