காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீரில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் உள்ள டிரகாட் பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயங்கரவாதிகள் மறைந்திருந்தது தெரியவந்தது.

போலீஸாரை கண்ட பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அப்போது பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில் இரு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல் அனந்தநாக் பகுதியிலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications